ADDED : டிச 18, 2024 05:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி : அவிநாசி நகர அ.தி.மு.க., சார்பில், அவிநாசி பேரூராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் பூத் கமிட்டி அமைப்பது, புதிய உறுப்பினர்களை சேர்ப்பது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது . 2026 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., ஆட்சி அமைத்திட பாடுபட வேண்டும், சொத்து வரி உயர்வை கண்டித்து நடக்கும் கடையடைப்பு போராட்டத்துக்கு முழு ஆதரவு அளிப்பது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அவிநாசி நகர பொறுப்பாளர் ஜெயபால் தலைமை வகித்தார். நகர ஐ.டி., பிரிவு செயலாளர் கோகுல்கார்த்திக், வார்டு செயலாளர்கள், கவுன்சிலர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.