ADDED : பிப் 25, 2024 11:45 PM
அ நிறம் | அளவு
திருப்பூர்;ஜெ., பிறந்த நாள் முன்னிட்டு திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., ஜெ., பேரவை சார்பில் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் விழா அரிசிக்கடை வீதியில் நடந்தது.
ஜெ., பேரவை செயலாளர் லோகநாதன் தலைமை வகித்தார். மாநகராட்சி கவுன்சிலர் கண்ணப்பன் முன்னிலை வகித்தார். முன்னாள்எம்.எல்.ஏ.,க்கள் குணசேகரன், சிவசாமி, நடராஜ், பழனிசாமி, கட்சி பேச்சாளர் மணிமேகலை உள்ளிட்டோர் பேசினர்.
ஜெ., பேரவை சார்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசினார்.
