/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பள்ளியில் சுகாதார உறுதிமொழி ஏற்பு
/
பள்ளியில் சுகாதார உறுதிமொழி ஏற்பு
ADDED : செப் 29, 2024 01:50 AM

அனுப்பர்பாளையம்: திருப்பூர் ஊராட்சி ஒன்றிய துாய்மை பாரத இயக்கம் சார்பில், துாய்மையை சேவை சுகாதார உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி பெருமாநல்லுார் ஊராட்சி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது.
இதில், திருப்பூர் ஊராட்சி ஒன்றிய தூய்மை பாரத இயக்க வட்டார ஒருங்கிணைப்பாளர் சண்முகசுந்தரம் பங்கேற்று கொண்டு திடக்கழிவு மேலாண்மையில் மாணவ, மாணவிகளின் பங்கு குறித்தும், துாய்மை காவலரிடம் வீட்டிலேயே மக்கும் குப்பை மக்காத குப்பை தரம் பிரித்து வழங்குவது குறித்தும் எடுத்து கூறினார்.
தொடர்ந்து, மாணவ, மாணவிகள் சுகாதாரம் குறித்த உறுதி மொழி எடுத்து கொண்டனர். தலைமை ஆசிரியர்கள் மந்திரமூர்த்தி, மேரிகவிதா, ஊராட்சி மன்ற தலைவர் சாந்தாமணி, துணை தலைவர் வேலுச்சாமி, ஊராட்சி செயலர் பொன்னுசாமி மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
---
பெருமாநல்லுார் அரசு பள்ளியில், சுகாதார உறுதிமொழி ஏற்றுக்கொண்ட மாணவியர்.