மின்கம்பங்களில் விளம்பரம் செயற்பொறியாளர் எச்சரிக்கை
மின்கம்பங்களில் விளம்பரம் செயற்பொறியாளர் எச்சரிக்கை
ADDED : ஜன 25, 2026 06:51 AM
திருப்பூர்: திருப்பூர் மின்கோட்ட செயற்பொறியாளர் பரஞ்ஜோதி அறிக்கை:
திருப்பூர் கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில், உயரழுத்த மற்றும் தாழ்வழுத்த மின் கம்பங்கள், தெருவிளக்குகள் அதிகம் உள்ளன. மின்வாரிய ஊழியர் மற்றும் 'டான்பிநெட்' (தமிழ்நாடு பைபர் நெட் ஒர்க்) பணியாளர்கள் மட்டும், பராமரிப்பு பணிக்காக மின்கம்பங்களில் ஏற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தனிநபர்கள் மின்கம்பங்களில் ஏறுவது தண்டனைக்குரிய குற்றம். மின்கம்பங்களில், தனியார் நிறுவனங்களின் பணியாளர்கள் சிலர், சட்டவிரோதமாக ஏறி, அவற்றில் தங்களது விளம்பர தட்டி மற்றும் கேபிள்களை கட்டியுள்ளனர். இதன் காரணமாக, மின் பணியாளரின் பணியில் சிரமம் ஏற்படுகிறது. மின்விபத்தும், உயிரிழப்பும் ஏற்படும் அபாயமும் உள்ளது.
எனவே, திருப்பூர் கோட்டத்துக்கு உட்பட்ட மின்கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்களில், சட்டத்துக்கு புறம்பாக வி ளம்பர தட்டிகள், அனுமதியில்லா கேபிள்களை கட்டக்கூடாது. ஏற்கனவே கட்டியுள்ள விளம்பர தட்டி மற்றும் கே பிள்களை, அகற்ற வேண்டும். தவறினால், சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
