/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சித்திரையில் கம்பு சாகுபடிக்கு அறிவுரை
/
சித்திரையில் கம்பு சாகுபடிக்கு அறிவுரை
ADDED : பிப் 04, 2025 11:53 PM
உடுமலை; உடுமலை சுற்றுப்பகுதிகளில், சித்திரை, மாசி, ஆடி மற்றும் புரட்டாசி பட்டத்தில், கம்பு சாகுபடி செய்கின்றனர். இறவை மற்றும் மானாவாரியாக இச்சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. சாகுபடிக்கு விளைநிலத்தை தயார்படுத்தும் முறைகள் குறித்து கோவை வேளாண் பல்கலை., யினர் அறிவுறுத்தியுள்ளனர்.
அதன்படி, இரும்பு மற்றும் நாட்டு கலப்பை கொண்டு தலா இரு முறை உழவு செய்து, மண்ணை கட்டிகள் இல்லாமல் உடைக்க வேண்டும்.
ெஹக்டேருக்கு, 12.5 டன் தொழுவுரம் அல்லது மட்கிய உரத்தை உழுவதற்கு முன் இட வேண்டும். உரங்கள் மண்ணுடன் ஒருங்கிணைய உழவு செய்வது அவசியம்.
ெஹக்டேருக்கு அசோஸ்பைரில்லம், 10 பாக்கெட் மற்றும் பாஸ்போபாக்டீரியா 10 பாக்கெட் அல்லது அசோபாஸ் 20 பாக்கெட்டுகளை, 25 கிலோ மண் மற்றும் 25 கிலோ தொழு உரத்துடன் கலந்து இட வேண்டும்.
மண் பரிசோதனை பரிந்துரைபடி தழை, மணி, சாம்பல் சத்துகளை இட வேண்டும். இத்தகைய வழிமுறைகளை பின்பற்றினால், கூடுதல் மகசூல் பெறலாம்.
இவ்வாறு, அறிவுறுத்தியுள்ளனர்.