/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பாதுகாப்பான தீபாவளி: மாணவருக்கு அறிவுரை
/
பாதுகாப்பான தீபாவளி: மாணவருக்கு அறிவுரை
ADDED : அக் 16, 2025 05:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: புது ராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி துவக்கப்பள்ளியில், பாதுகாப்பான தீபாவளி என்ற தலைப்பில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பள்ளி தலைமையாசிரியர் மோகன் தலைமை தாங்கினார்.
மழை, இடி, மின்னலின் போது, மரத்தடியில் நிற்க கூடாது. மரத்தடியில் நின்று மொபைல்போன் பயன்படுத்தக் கூடாது. மின்கம்பம் மற்றும் கம்பிகளை தொடக்கூடாது.
நீரை, காய்ச்சி வடிகட்டி குடிக்க வேண்டும். தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கும் போது, பெரிய குச்சியை பயன்படுத்தி பட்டாசின் திரியை பற்ற வைக்க வேண்டும். பட்டாசுகளை கையில் பிடித்து பற்ற வைத்து, துாக்கி எறியக்கூடாது உள்ளிட்ட அறிவுறுத்தல்கள் மாணவ, மாணவியருக்கு வழங்கப்பட்டன.