ADDED : அக் 30, 2025 11:45 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில், ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் செல்வராஜ் தலைமை வகித்தார். வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
வாக்காளர் பட்டியல் தீவிரத்திருத்தப்பணிக்கு கட்சியினர் தயாராகும் வகையில், தங்கள் பகுதி வாக்காளர் பட்டியல் குறித்த தரவுகளை சேகரித்தல்; வார்டு மற்றும் பூத் தோறும் கட்சி நிர்வாகிகள் தெருமுனைக் கூட்டம் நடத்துதல்; வீடு தோறும் சென்று வாக்காளர்களைச் சந்தித்து விளக்குதல் ஆகியன குறித்து அறிவுறுத்தப்பட்டது.

