/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பணியின் போது போனில் பேச வேண்டாம்; மின் களப்பணியாளருக்கு 'அட்வைஸ்'
/
பணியின் போது போனில் பேச வேண்டாம்; மின் களப்பணியாளருக்கு 'அட்வைஸ்'
பணியின் போது போனில் பேச வேண்டாம்; மின் களப்பணியாளருக்கு 'அட்வைஸ்'
பணியின் போது போனில் பேச வேண்டாம்; மின் களப்பணியாளருக்கு 'அட்வைஸ்'
ADDED : டிச 03, 2025 07:17 AM

திருப்பூர்: மின்களப்பணியாளர், கம்பத்தில் ஏறும் போது, மொபைல் போன் பேசுவதை தவிர்க்க வேண்டுமென, மின்பாதுகாப்பு விழிப்புணர்வு முகாமில் அறிவுறுத்தப்பட்டது.
தமிழ்நாடு மின்பகிர்மான கழத்தின், திருப்பூர் பகிர்மான வட்டம், திருப்பூர் கோட்டம் சார்பில், மின் களப்பணியாளருக்கான மின் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது. திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க கூட்டரங்கில் நடந்த நிகழ்ச்சிக்கு, மேற்பார்வை பொறியாளர் சுமதி தலைமை வகித்தார்.
ஊத்துக்குளி கோட்ட செயற்பொறியாளர் விஜய ஈஸ்வரன், களப்பணியாளருக்கான பாதுகாப்பு வழி முறைகள் குறித்து பேசினார். திருப்பூர் செயற்பொறியாளர் (பொறுப்பு) செந்தில்குமார், கோட்ட பொறியாளர்கள், களப்பணியாளர்களுக்கு, பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நிகழ்ச்சியில், செயற்பொறியாளர்கள் பேசியதாவது:
மின்கம்பத்தில் ஏறும் முன், நிதானமாக மின் வினியோகம் துண்டிக்கப்பட்டதை சரி பார்த்துக்கொள்ள வேண்டும். கம்பத்தில் ஏறும் போது, மொபைல் போன் பேசுவதை தவிர்க்க வேண்டும். கவனம் சிதறி விபத்து ஏற் படும் அபாயம் உள்ளது.
சில பகுதிகளில், சாலை விபத்துகளை காட்டிலும், மின்சாரம் தாக்கி பணியாளர் பலியாவது அதிகரித்துள்ளதாக கூறுகின்றனர். அவற்றை தவிர்க்க வேண்டும். முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மற்ற பணிகளில், எங்கே தவறு நிகழ்ந்தாலும் சரிசெய்து கொள்ளலாம். மின் பணியில் கவனக்குறைவாக இருந்தால், விபத்தில் உயிரிழக்கும் அபாயம் உள்ளது. மின்கம்பத்தில், அரசு கேபிள் நீங்கலாக உள்ள, கேபிள்கள், இடையூறாக உள்ள விளம்பர தட்டிகளை உடனுக்குடன் அகற்றிவிட வேண்டும்.
மின் களப்பணியாளர் எப்போதும், நிதானத்துடன் பணியாற்ற வேண்டும். எச்சரிக்கையுடன் இருப்பதுடன், எதிர்பாராத விபத்தையும் எதிர்பார்ப்பது போல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
மின்கம்பத்தில் ஏறும் பணிக்கு, தனியாக செல்லக்கூடாது; இருவர் செல்ல வேண்டும்.அடிக்கடி ஏற்படுத்தப்படும் விழிப்புணர்வை புரிந்துகொண்டு, எச்சரிக்கையாகவும், மிகுந்த கவனமாகவும் பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் பேசினர்.

