sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 தென்னை வளர்ச்சி மேம்படுத்த விவசாயிகளுக்கு அறிவுரை

/

 தென்னை வளர்ச்சி மேம்படுத்த விவசாயிகளுக்கு அறிவுரை

 தென்னை வளர்ச்சி மேம்படுத்த விவசாயிகளுக்கு அறிவுரை

 தென்னை வளர்ச்சி மேம்படுத்த விவசாயிகளுக்கு அறிவுரை


ADDED : பிப் 15, 2026 06:22 AM

Google News

ADDED : பிப் 15, 2026 06:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லடம்: பல்லடம் பகுதியில், தென்னை விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில், தமிழ்நாடு வேளாண் பல்கலை மாணவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

அவ்வகையில், நாரணாபுரம் கிராமத்தில் முகாமிட்ட மாணவர்கள், தென்னை விவசாயிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினர்.

தென்னை மரங்களுக்கு டானிக் பயன்படுத்துவதால், தென்னை மரங்களின் வளர்ச்சி மேம்படும். மேலும், குறும்பை கொட்டுதல் குறைந்து, பாளைகளின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன், உற்பத்தி திறனும் அதிகரிக்கும். மேலும், பூச்சி மற்றும் நோய்களுக்கு எதிரான எதிர்ப்பு ஆற்றலை தரும். இதேபோல், தென்னை மரங்களை தாக்கும் பூச்சிகளிடம் இருந்து தென்னைகளை பாதுகாக்க, மஞ்சள் ஒட்டுப்பொறி பயன் படுகிறது. இதன் மூலம், வெள்ளை ஈக்கள் உள்ளிட்ட சாறு உறிஞ்சும் பூச்சிகள் கட்டுப்படுகின்றன.

எனவே, இவை, குறைந்த செலவில் நடைமுறைப்படுத்தக் கூடிய பூச்சி மேலாண்மை தொழில்நுட்பமாகும், என்று அறிவுறுத்தினர். முன்னதாக, தென்னை டானிக் பயன்படுத்தும் முறை மற்றும் மஞ்சள் ஒட்டுப் பொறியின் செயல்பாடுகள் குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், தென்னை விவசாயிகள் பலரும் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us