/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இலவச வீட்டு மனைப் பட்டா விரைந்து வழங்க அறிவுரை
/
இலவச வீட்டு மனைப் பட்டா விரைந்து வழங்க அறிவுரை
ADDED : அக் 16, 2025 08:37 PM
-நமது நிருபர் -
மாவட்ட வருவாய்த்துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது.
வருவாய்த்துறை சார்பில், மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுவரும் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
திருப்பூர் கலெக்டர் மனிஷ் நாரணவரே பேசுகையில், 'நத்தம், இட்டேரி, பூமிதானம், பிற்படுத்தப்பட்டோர் நத்தம், ஆதிதிராவிடர் நத்தம், வண்டிப்பாதை, தீர்வு ஏற்படாத தரிசு, பனந்தோப்பு, மந்தை ஆகிய நிலங்களின் விவரங்கள்; இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதற்கு தயார் நிலையில் உள்ள நிலங்களின் விவரங்கள் தயாரிக்கப்பட வேண்டும்; பொதுமக்களுக்கு விரைவாக இலவச வீட்டுமனை பட்டா கிடைக்கும் வகையில் துறை சார்ந்த அலுவலர்கள் பணிபுரிய வேண்டும்' என, அறிவுறுத்தினார்.