/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அட்வகேட்ஸ் அசோசியேஷன் தேர்தல் 'விறுவிறு'
/
அட்வகேட்ஸ் அசோசியேஷன் தேர்தல் 'விறுவிறு'
ADDED : ஏப் 15, 2025 11:48 PM
திருப்பூர்; திருப்பூர் அட்வகேட்ஸ் அசோசியேஷன் 2025-26ம் ஆண்டுக்கான நிர்வாகிகள் பொறுப்புக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. தேர்தல் நடத்தும் அலுவலராக வக்கீல் சாய்ராம் செயல்பட்டு வேட்பு மனுக்கள் பெற்றார்.
இதில், தலைவர் பதவிக்கு பாலகுமார், பொருளாளர் பதவிக்கு சண்முகம், துணை தலைவர் பதவிக்கு கவுரிசங்கர் மற்றும் அன்புச்செல்வி, இணை செயலாளர் (பெண்) ஜோதிமணி ஆகியோர் மட்டும் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். இதனால், இப்பதவிகளுக்கு அவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்படவுள்ளனர்.
செயலாளர் பதவிக்கு பிரகாஷ் மற்றும் ஆனந்தன் ஆகியோர் மனுத்தாக்கல் செய்தனர். இணை செயலாளர் (பொது) பதவிக்கு தினேஷ்குமார், வெங்கடேசன் மற்றும் சண்முகம் ஆகிய மூன்று பேர் போட்டியிடுகின்றனர்.
இவ்விரு பதவிகளுக்கும், 23ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது. அன்று காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறும். இதில், 534 பேர் ஓட்டளிக்கின்றனர். இதுதவிர, சங்கத்தின் நிர்வாக குழு (பொது) உறுப்பினர்களாக சபரி, விநாயகம், சரவணசுபாஷ் சந்தர், சதீஸ்குமார், பிரசன்னா; பெண் உறுப்பினர்களாக தமிழ்செல்வி, அமுதா மற்றும் ரேகா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.