/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சட்டசபை தேர்தல் வரும் பின்னே... 'கள்' விவகாரம் வரும் முன்னே!
/
சட்டசபை தேர்தல் வரும் பின்னே... 'கள்' விவகாரம் வரும் முன்னே!
சட்டசபை தேர்தல் வரும் பின்னே... 'கள்' விவகாரம் வரும் முன்னே!
சட்டசபை தேர்தல் வரும் பின்னே... 'கள்' விவகாரம் வரும் முன்னே!
ADDED : ஜூன் 13, 2025 11:09 PM

ஒவ்வொரு முறை தேர்தல் வரும் போதும், ஆளும்கட்சி மற்றும் தேர்தல் களம் காணும் அரசியல் கட்சிகளுக்கு அழுத்தம் தரக்கூடிய வகையில், பிரதான பிரச்னைகள் முன்வைக்கப்படும்.
அந்த வகையில், 'தமிழகத்தில் கள்ளுக்கான தடை நீக்கம்' என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக விவசாயிகளால் முன்வைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த கோரிக்கை வலுப்பெறுகிறது; ஆளுங்கட்சிக்கான அழுத்தமும், விவசாயிகள் சங்கத்தினரால் வலுவாக முன்வைக்கப்படுகிறது.
பா.ஜ., உள்ளிட்ட கட்சிகள், விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றன.அடுத்தாண்டு நடத்தப்பட உள்ள சட்டசபை தேர்தலிலும், கள் விவகாரத்தை முன்னிறுத்த விவசாய அமைப்புகள் தயாராகி வருகின்றன.
'கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும்' என்பதில், அனைத்து விவசாய அமைப்புகளும் ஒருமித்த கருத்துடனேயே உள்ளன. 'அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் வரவுள்ள நிலையில் கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும்' என்பதே, விவசாய அமைப்புகளின் ஒருமித்த குரலாகவும் உள்ளது.
'டாஸ்மாக்' பாதிப்பு வராது?
கள்ளுக்கான தடையை நீக்குவதற்கு டாஸ்மாக் மது விற்பனையால் கிடைக்கும் வருவாய் பாதிக்கப்படும் என்று அரசு கருதுவதுதான் காரணமாகக் கூறப்பட்டு வருகிறது. ''மதுவிலக்கு என்பது, உலகளவில் தோல்வியடைந்த ஒரு திட்டம். 'டாஸ்மாக்' கடையில் மது அருந்துபவர்கள் வேறு; கள் அருந்துபவர்கள் வேறு.
எனவே, கள்ளுக்கு தடை நீக்கினால், 'டாஸ்மாக்' கடைகளில் எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது. 'டாஸ்மாக்' மதுக்கடையில் விற்கப்படும் மதுவை, நாள் முழுக்க அருந்தி, நிதானமிழந்து இருப்பவர்கள் ஏராளம். ஆனால், உடலுக்கு நன்மை தரும் கள்ளைப் பொறுத்தவரை, அரை லிட்டர் முதல், ஒரு லிட்டருக்கு மேல் குடிக்க முடியாது'' எனக் கூறுகிறார், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி.