/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கோடை வரும் பின்னே... தர்பூசணி வரும் முன்னே!
/
கோடை வரும் பின்னே... தர்பூசணி வரும் முன்னே!
ADDED : பிப் 13, 2024 12:27 AM

திருப்பூர்:திருப்பூருக்கு சீசனுக்கு முன்பே, தர்பூசணி பழங்கள் விற்பனைக்கு வரத் துவங்கியுள்ளது. இருப்பினும் வரத்து அதிகரிக்கவில்லை. குடோன் அமைத்து, நுாறுக்கும் அதிகமான பழங்களை இருப்பு வைத்துள்ளவர்களிடம், கிலோ, 30 ரூபாய்க்கும், ஒரு பீஸ், 20 ரூபாய்க்கும் தர்பூசணி விற்கப்படுகிறது. வழக்கமாக தர்பூசணி ஒரு பீஸ், 10 ரூபாய், கிலோ, 20 ரூபாய் விற்கும்.
''நிறைய பழங்கள் வரும் போது தான் விலை குறையும்; விலை உயர்வு என்றாலும், பலரும் வாங்கி சாப்பிடுகின்றனர்'' என்கின்றனர், வியாபாரிகள்.
வெள்ளரிக்கும் மவுசு அதிகரித்துள்ளது. கிலோ, 60 முதல், 70 ரூபாய்க்கு விற்றது. முலாம் பழம் கிலோ, 20 - 30 ரூபாய்; ஒரு இளநீர் 20-40 ரூபாய் வரை விற்கிறது. இளநீர் கடைகள் அதிகரித்துள்ளன. நுங்கு விற்பனை இன்னும் துவங்கவில்லை.