/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கோடை துவங்கும் பின்னே... தர்பூசணி வந்தது முன்னே!
/
கோடை துவங்கும் பின்னே... தர்பூசணி வந்தது முன்னே!
ADDED : ஜன 05, 2025 02:22 AM

திருப்பூர்: கோடை காலம் துவங்க இன்னும் மூன்று மாதம் உள்ள நிலையில், தர்பூசணி விற்பனை துவங்கியுள்ளது.
திருப்பூரில் கோடையில், வெயில் சுட்டெரிக்கும்; அதிகபட்சம், 98 டிகிரி பாரன்ஹீட் வரை வெயில் இருக்கும். கோடையில், உடல் வெப்பத்தை தணிக்கவும், நீர் சத்து அதிகப்படுத்திக் கொள்ளவும், தர்பூசணி, கரும்பு ஜூஸ், சர்பத் உள்ளிட்டவற்றை மக்கள் உண்பர்.
கோடை காலம் துவங்கும் முன்பே, திருப்பூரில் தர்பூசணி விற்பனை துவங்கியுள்ளது. திருப்பூர் மாவட்ட கூட்டுறவு விற்பனை சங்கத்தின் சில்லறை விற்பனைக் கடைகளில் தர்பூசணி விற்பனை துவங்கியுள்ளது. அங்காடி ஊழியர்கள் கூறுகையில்,'திண்டுக்கல்லில் இருந்து, விவசாயிகளிடம் இருந்து நேரடியாக தர்பூசணி வாங்கி வந்து விற்பனை செய்கிறோம். தற்போது, கிலோ, 30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது,' என்றனர்.