தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ வயசு வெறும் நம்பர்தான்... தடகளத்தில் சாதித்த சீனியர்கள்

வயசு வெறும் நம்பர்தான்... தடகளத்தில் சாதித்த சீனியர்கள்

வயசு வெறும் நம்பர்தான்... தடகளத்தில் சாதித்த சீனியர்கள்


UPDATED : செப் 27, 2026 09:55 PM

ADDED : செப் 27, 2026 09:01 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 27, 2026 09:55 PM ADDED : செப் 27, 2026 09:01 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர்:திருப்பூர் சிக்கண்ணா கல்லுாரி மைதானத்தில், அசோசியேஷன் ஆப் தமிழ்நாடு மாஸ்டர்ஸ் அத்லெட்டிக்ஸ் அண்ட் ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் சார்பில் மாவட்ட அளவிலான மூத்தோர் தடகளப் போட்டிகள் நடைபெற்றன.

இதில், ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த 282 வீரர்கள், 168 வீராங்கனையர் என மொத்தம் 450 பேர் பங்கேற்றனர். மூத்தோர் விளையாட்டு சங்கத் தலைவர் நாகராஜ் தலைமை வகித்தார். செயலாளர் சுமதி முன்னிலை வகித்தார். தேசியக் கொடியை ஏற்றி, போட்டிகளை ஸ்ரீ அம்மன் ஜுவல்லர்ஸ் செந்தில்குமார் தொடங்கி வைத்தார்.

30, 35, 40 மற்றும் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கான பிரிவுகளில் 100, 200, 400, 800 மீட்டர் ஓட்டப் பந்தயங்கள், 3,000 மீட்டர் நடைப் போட்டி, 2,000 மீட்டர் நடைப் போட்டி ஆகியவை நடைபெற்றன. மேலும், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், சங்கிலிக் குண்டு எறிதல், வட்டு எறிதல், நீளம் தாண்டுதல், மும்முறைத் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகளும் நடத்தப்பட்டன.

அதேபோல், 50, 55, 60, 65 மற்றும் 70 வயதுக்கு மேற்பட்டோருக்கான பிரிவுகளில் ஓட்டப் பந்தயம், நடைப் பந்தயம், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், சங்கிலிக் குண்டு எறிதல், வட்டு எறிதல் மற்றும் நீளம் தாண்டுதல் ஆகிய போட்டிகள் நடைபெற்றன.

போட்டிகளில் பங்கேற்ற வீரர், வீராங்கனையர் ஆர்வத்துடன் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். அவர்களை பார்வையாளர்கள் உற்சாகப்படுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us