sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

'ஏஜன்ட் ஏ.ஐ.,' தொழில்நுட்பம் பின்னலாடை உற்பத்தி உலக தரத்துக்கு உயரும்!

/

'ஏஜன்ட் ஏ.ஐ.,' தொழில்நுட்பம் பின்னலாடை உற்பத்தி உலக தரத்துக்கு உயரும்!

'ஏஜன்ட் ஏ.ஐ.,' தொழில்நுட்பம் பின்னலாடை உற்பத்தி உலக தரத்துக்கு உயரும்!

'ஏஜன்ட் ஏ.ஐ.,' தொழில்நுட்பம் பின்னலாடை உற்பத்தி உலக தரத்துக்கு உயரும்!


ADDED : ஜன 07, 2025 06:58 AM

Google News

ADDED : ஜன 07, 2025 06:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; 'ஏ.ஐ.,' எனப்படும் 'செயற்கை நுண்ணறிவு' என்ற புதிய யுத்திதான், உலகத்தையே புரட்டிப் போடப்படுகிறது. அத்தகைய நோக்கத்துடன், 'இந்த ஆண்டு ஏ.ஐ., ஆண்டு' என்று பல்வேறு நாடுகள் அறிவித்துள்ளன. புதிய தொழில்நுட்பங்களை, ஒவ்வொரு தொழில்களில் புகுத்தவும், மத்திய அரசு பலகட்ட முயற்சிகளை எடுத்து வருகிறது.

'ஜெனரேட்டிவ் ஏ.ஐ.,' என்பது, ஒருநபரின் தனிப்பட்ட தரவுகளை கொண்டு, மாறுபட்ட வகையிலான, தகவல் தயாரிப்புகளை உருவாக்கலாம். உதாரணமாக, வழக்கமான வாழ்த்து அட்டையை, மாறுபட்ட வகையில் தயாரிக்கும் திறன்கொண்டது. 'சேட் ஜி.டி.பி.,' என்ற சாப்ட்வேரில்,' நாம் கேட்கும் தகவல்களை பெறலாம்; இவற்றையெல்லாம், அடுத்தகட்டத்துக்கு உயர்த்தும் வகையில், 'ஏ.ஐ.,' தொழில்நுட்பம் புகுத்தப்பட உள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக, 'ஏஜன்ட் ஏ.ஐ.,' தொழில்நுட்பம்,' அனைத்து தொழில் பிரிவுகளிலும் பயன்படுத்த வல்லது.

பின்னலாடை உற்பத்தி


பின்னலாடை உற்பத்தி ஆலைகளில், 'மேனுவலாக' செய்யப்படும் நுட்பமான பணிகளை, இனிமேல் தொழில்நுட்ப ரீதியாக செய்ய முடியும். அதாவது, 'பேட்டர்ன் மேக்கிங்', 'கேட்', 'டிசைனிங் என, அனைத்து நுட்ப பணிகளும், ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் மிக எளிதாக செய்யலாம் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இதேபோல், பனியன் துணி 'கட்டிங்', எம்பிராய்டரிங், பிரின்டிங் என, அனைத்து பிரிவுகளிலும், இத்தொழில்நுட்பம் பணிகளை எளிதாக மாற்றித்தரும். திருப்பூரில், '3டி' தொழில்நுட்பம் ஏற்கனவே வந்துவிட்டது; ஏ.ஐ., தொழில்நுட்பத்தால், அவற்றையும் பல மடங்கு உயர்த்தி பிரின்ட் செய்ய முடியும்.

மத்திய அரசின், 'ஸ்டார்ட் அப் இந்தியா' வழிகாட்டி ஆலோசகர் ஜெயபிரகாஷ் கூறியதாவது:

வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள குழப்பத்தால், இந்தியாவில், 2023ம் ஆண்டை காட்டிலும், இந்தாண்டு, 35 சதவீதம் ஏற்றுமதி அதிகரித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில், சாதாரண தகவமைப்பை கொண்டு, மாறுபட்ட புதிய தொழில்நுட்பமாக மாற்ற முடியும்; அதற்கு 'ஏஜன்ட் ஏ.ஐ.,' தொழில்நுட்பம் பெரிதும் கைகொடுக்கும். அதற்காகவே, மத்திய ஜவுளித்துறை அமைச்சகம், 'ஏ.ஐ.,' ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க களமிறங்கியுள்ளது. வரும் காலத்தில், மத்திய அரசை அணுகி, ஏ.ஐ., தொழில்நுட்ப வழிகாட்டுதலை பெறலாம்.

இவ்வாறு, அவர் கூறினார்.

'டிஜிட்டல் பாஸ்போர்ட்'


ஐரோப்பிய நாடுகளுடன், ஜவுளி வர்த்தகம் செய்ய, 'டிஜிட்டல் பாஸ்போர்ட்' கட்டாயமாகியுள்ளது. ஒரு 'டி-சர்ட்' வாங்கும் போது, வாடிக்கையாளருக்கு அனைத்து தயாரிப்பு தகவமைப்பும் தெரிய வேண்டும். பஞ்சு கொள்முதல் துவங்கி, நுாலாக மாற்றியது, துணியாக்கி, சாயமிட்டது ஆடை வடிவமைப்பு, பிரின்டிங், எம்பிராய்டரிங் துவங்கி, பேக்கிங் செய்யும் அட்டை பெட்டி தயாரிப்பு வரை, அனைத்து புள்ளிவிவரங்களும், 'ஸ்கேன்' செய்வதன் மூலமாக தெரியவர வேண்டும்.

அத்தகைய, 'டிஜிட்டல் பாஸ்போர்ட்' இருந்தால் மட்டுமே, ஜவுளி ஏற்றுமதியில் முன்னுரிமை தகுதி பெற முடியும். அத்தகைய, 'டிஜிட்டல் பாஸ்போர்ட்' தயாரிப்புக்கு, 'ஏ.ஐ., ' தொழில்நுட்பம் பெரிதும் கை கொடுக்கும் என்பது புதிய தகவல்.






      Dinamalar
      Follow us