/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வேளாண் வளர்ச்சி திட்ட பணி: மதிப்பீட்டுக்குழு கள ஆய்வு
/
வேளாண் வளர்ச்சி திட்ட பணி: மதிப்பீட்டுக்குழு கள ஆய்வு
வேளாண் வளர்ச்சி திட்ட பணி: மதிப்பீட்டுக்குழு கள ஆய்வு
வேளாண் வளர்ச்சி திட்ட பணி: மதிப்பீட்டுக்குழு கள ஆய்வு
ADDED : ஜன 23, 2025 12:18 AM
திருப்பூர்; அனைத்து கிராமங்களிலும், வேளாண் வளர்ச்சியை உருவாக்கும் வகையில் அனைத்து அரசு துறைகளின் ஒருங்கிணைப்புடன், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது.
தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டுவருவது, நீராதாரங்களை பெருக்குவது, சூரிய மின் சக்தி பம்ப் செட்கள் அமைத்து நுண்ணுயிர் பாசன வசதி ஏற்படுத்துதல், பால் உற்பத்தி பெருக்கம், வேளாண் விளை பொருட்களை மதிப்பு கூட்டுதல் செய்து சந்தைப்படுத்துதல், வருவாய்த்துறை மூலம் பட்டா மாறுதல், இ- அடங்கல், குறு, சிறு உழவர்களுக்கு சான்று வழங்கல், கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் அதிக பயிர் கடன் வழங்கல் ஆகியவை இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாக உள்ளது.
வேளாண் பொறியியல் துறை, தோட்டக்கலைத்துறை, வருவாய்த்துறை உள்பட பல்வேறு துறைகள் சார்பில், விவசாயிகளுக்கு தென்னங்கன்று வினியோகம், கை தெளிப்பான், விசை தெளிப்பான், தார்ப்பாய், பண்ணை குட்டை அமைக்க மானியம், குளம், குட்டை துார்வாருதல், 'பவர் டில்லர்' என ஏராளமான வேளாண் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த 2021 - 22 நிதியாண்டில், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில், மொத்தம் 16.21 கோடிக்கும்; 2022 - 23 ல், 21.79 கோடி ரூபாய் மதிப்பிலும் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2021 - 22 நிதியாண்டில், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் வழங்கப்பட்ட நிதியில், வளர்ச்சி பணிகள் முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ளதா என, மதிப்பீட்டு குழுவினர் திருப்பூர் மாவட்டத்தில் ஆய்வு நடத்தினர்.
மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சுந்தரவடிவேலு, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்) ஷீலா பூசலட்சுமி மற்றும் வேளாண் துறை சார்ந்த அலுவலர்கள் குழுவினர், ஊத்துக்குளி, விருமாண்டம்பாளையத்தில், தோட்டக்கலை, வேளாண் பொறியியல் துறை மூலம் செயல்படுத்தப்பட்ட தரிசு நில தொகுப்பு, குட்டை துார்வாருதல், பண்ணை குட்டை, உலர் களம் மற்றும் வருவாய்த்துறை உள்பட இதர துறைகள் மூலம் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து ஆய்வு செய்தனர்.

