/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'உழவரை தேடி வேளாண்மை' திட்டம்; ஆலோசனை கூட்டம்
/
'உழவரை தேடி வேளாண்மை' திட்டம்; ஆலோசனை கூட்டம்
ADDED : மே 29, 2025 11:24 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை, ; கொங்கல்நகரத்தில், 'உழவரை தேடி வேளாண்மை'-உழவர் நலத்துறை திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.
குடிமங்கலம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் செல்வகுமார் தலைமை வகித்தார். ஊராட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில், பொங்கலுார் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானி துக்கையன் துறை சார்ந்த திட்டங்கள் குறித்து பேசினார். கூட்டத்தில், தோட்டக்கலைத்துறை சார்பாக, 2025-26 ம் ஆண்டுக்கான மானிய திட்டங்களுக்கு முன்பதிவு செய்யப்பட்டது.
மேலும், கொங்கல்நகரத்தைச்சேர்ந்த 2 விவசாயிகளுக்கு, தோட்டக்கலைத்துறையின் நுண்ணீர் பாசன திட்டத்தில் சொட்டு நீர் பாசனம் அமைக்க பணியானை வழங்கப்பட்டது.