ADDED : மார் 14, 2026 06:11 AM
அ நிறம் | அளவு
பொங்கலுார்: விவசாய பணிகள் திறந்தவெளியில் செய்யப்படுகிறது. கோடை வெயில் கொளுத்த துவங்கி விட்டது. தற்பொழுது வெங்காயம், தக்காளி உள்ளிட்ட காய்கறி பயிர்களுக்கு அறுவடை சீசன் காலம். அறுவடை பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு வெயிலின் தாக்கத்தால் உடல் சோர்வு ஏற்படுகிறது. எனவே, அவர்களால் முழுமையாக பணி செய்ய முடிவதில்லை. பயிர்களுக்கு நீர் பாய்ச்சும் பணியை இரவு நேரங்களில் மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனால், அறுவடை பணிகளை பகல் நேரத்தில் மட்டுமே செய்ய வேண்டி உள்ளது. வெயிலை சமாளிக்க முடியாமல் தொழிலாளர்கள் தவித்து வருகின்றனர். கோடைகால அறுவடை பணி சவாலானதாக மாறியுள்ளது. கோடை மழை பெய்து நிலம் குளிர்ச்சி அடைந்தால் மட்டுமே நிலைமை சீராகும்.
