/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றும் திட்டம்; வேளாண் துறை அழைப்பு
/
தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றும் திட்டம்; வேளாண் துறை அழைப்பு
தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றும் திட்டம்; வேளாண் துறை அழைப்பு
தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றும் திட்டம்; வேளாண் துறை அழைப்பு
ADDED : ஜூலை 18, 2025 09:17 PM

உடுமலை; மடத்துக்குளம் வட்டாரத்தில், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
மடத்துக்குளம் வேளாண் உதவி இயக்குனர் வசந்தா கூறியதாவது:
மடத்துக்குளம் வட்டாரத்தில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், நடப்பாண்டு ஜோத்தம்பட்டி, காரத்தொழுவு கிராமங்களில் வேளாண் துறை வாயிலாக, தனி நபர் தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றுதல், வரப்பு பயிராக உளுந்து சாகுபடி, ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை மற்றும் கைத்தெளிப்பான் வழங்குதல் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்ற, முட்புதர்கள் அகற்றி, நிலத்தை சமன்படுத்தி, உழவு மேற்கொண்டு, பயிர் சாகுபடி செய்ய, ஒரு ஹெக்டேருக்கு, 9,600 ரூபாய் பின்னேற்பு மானியமாக விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.
சோளம், கம்பு, மக்காச்சோளம், நெல் போன்ற பயிர்களில், வரப்பு பயிராக உளுந்து பயிரிட்டும், பயிரில் பூச்சி நோய் தாக்குதலை கண்காணித்து, உரிய பயிர் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொண்டு, பயிர் விளைச்சலை அதிகரிக்கும் வகையில், ஹெக்டருக்கு, 5 கிலோ உளுந்து விதை மானிய விலையில் வழங்கப்படுகிறது.
ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மையின் கீழ், நுண்ணுாட்ட உரங்கள், பயிர் பாதுகாப்பு மருந்து, நுண்ணுயிர் உரங்கள், ரூ. 1,250 மானியத்தில் வழங்கப்படுகிறது. இத்திட்டங்களின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள், உதவி வேளாண் அலுவலர் சிம்சோன், 97877 79884 என்ற எண்ணிலும், வேளாண்துறை சார்ந்த திட்டங்களை அறிந்து கொள்ள வேளாண் உதவி இயக்குனர் 70101 57948 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, வேளாண் உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.