/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பிரின்டிங் துறையில் ஏ.ஐ., தொழில்நுட்பம்
/
பிரின்டிங் துறையில் ஏ.ஐ., தொழில்நுட்பம்
ADDED : செப் 27, 2024 11:38 PM

திருப்பூர்: இளம் தொழில் முனைவோர்களைக் கொண்டு, ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் பிரின்டிங் மேம்பாடு செய்வதென, 'டெக்பா' மகாசபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
திருப்பூர் நிட் பிரின்டர்ஸ் அசோசியேஷன் மகாசபை கூட்டம், இடுவம்பாளையம் சங்க அலுவலகத்தில் நேற்று நடந்தது.
கூட்டத்துக்கு, அதன் தலைவர் ஸ்ரீகாந்த் தலைமை வகித்தார். செயலாளர் கோபாலகிருஷ்ணன், சங்கத்தின் செயல் திட்ட அறிக்கையை சமர்ப்பித்தார். பொருளா ளர் திருமூர்த்தி, வரவு - செலவை அறிக்கையை தாக்கல் செய்தார்.
சக்தி சினிமாஸ் உரிமை யாளர் சுப்பிரமணியம், சிறப்பு விருந்தினராக பங்கேற்று, 'உழைப்பே உயர்வு' என்ற தலைப்பில் பேசினார். சங்கத்தில் புதிதாக வந்துள்ள இளம் தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் அவரது கருத்துக்கள் அமைந்திருந்தது.
சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், 'பிரின்டிங்' தொழில் கடந்து வந்த பாதை குறித் தும், எதிர்கால திட்டங்கள் குறித்தும் பேசினர். குறிப்பாக, 'ஸ்கிரீன்' பிரின்டிங் மற்றும் 'டிஜிட்டல்' பிரின்டிங் தொழில்நுட்ப மேம்பாடு குறித்து விரிவாக பேசினர்.
பிரின்டிங் துறைக்கு வரும் இளம் தொழில் முனைவோர்களைக் கொண்டு, ஏ. ஐ., தொழில்நுட்பத்தில் பிரின்டிங் மேம்பாடு செய்வது, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பொது குழுவை கூட்டி, தொழில் மேம்பாட்டுக்காக ஆலோசிப்பது, உள்நாடு மற்றும் ஏற்றுமதி வர்த்தக மேம்பாட்டுக்காக முழுமையான ஒத்துழைப்பை வழங்குவது.
புதிய தொழில்நுட்பங்களை திருப்பூரில் அறிமுகம் செய்ய தொடர் முயற்சி எடுப்பது என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில், 'டெக்பா' சங்க நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.