/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'ஆடை உற்பத்தி திறன் மேம்பாடு ஏ.ஐ., தொழில்நுட்பம் அவசியம்'
/
'ஆடை உற்பத்தி திறன் மேம்பாடு ஏ.ஐ., தொழில்நுட்பம் அவசியம்'
'ஆடை உற்பத்தி திறன் மேம்பாடு ஏ.ஐ., தொழில்நுட்பம் அவசியம்'
'ஆடை உற்பத்தி திறன் மேம்பாடு ஏ.ஐ., தொழில்நுட்பம் அவசியம்'
ADDED : பிப் 16, 2025 11:48 PM
திருப்பூர்; 'பாரத் டெக்ஸ் -2025' கண்காட்சியில், எம்.எஸ்.எம்.இ., தொழில்கள் குறித்த கலந்தாய்வில், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க துணை தலைவர் இளங்கோவன் பேசியதாவது:
பின்னலாடை தலைநகரான திருப்பூரில், 95 சதவீதம் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. உற்பத்தித்திறன் மற்றும் தொழில்நுட்பத்தில் அதிக இடைவெளி ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் தொழிற்சாலைகளில், பேஷன் ஆடைகள் உற்பத்தி திறன், 35 சதவீதமாக இருக்கிறது; சாதாரண ஆடைகள் உற்பத்தி 65 சதவீதத்தை எட்டியுள்ளது. ஒவ்வொரு தொழிற்சாலையிலும், 70 சதவீதம் பெண் தொழிலாளர் வேலை வாய்ப்பு பெறுகின்றனர்.
தொழிலாளர் குடும்பத்தினர், வாழ்வின் அடுத்தகட்டத்துக்கு நகர்ந்துள்ளதால், உற்பத்தி திறனில் சவால் எழுந்துள்ளது. உள்ளூர் தொழிலாளர் பற்றாக்குறையால், புலம்பெயர் தொழிலாளர்களை நம்பியிருக்க வேண்டியுள்ளது. திறன் பயிற்சி பெற்ற தொழிலாளர் தேவை அதிகரித்துள்ளது. பல்வேறு செலவினங்களால், லாப விகிதமும் சரிந்துவிட்டது.
முதலீட்டு மானியம் கிடைக்காமல், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மேம்பட முடியாமல் சிரமப்படுகின்றன. போட்டி நாடுகள், தொழில்நுட்ப வளர்ச்சியால் முன்னிலையில் உள்ளன. தொழிற்சாலைகள் விரிவாகும் போது, தொழிலாளர் தேவை அதிகரிக்கிறது; இடமாற்றத்தாலும், உற்பத்தித்திறன் குறைகிறது.
ஆடை உற்பத்தியில், 'ஏ.ஐ., மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்வதன் மூலம், மனித சக்தி திறனை குறைத்து, உற்பத்தி திறனை அதிகரிக்க வாய்ப்பு கிடைக்கும். தொழில்நுட்ப மேம்பாட்டுக்கு, விதிமுறைகளை தளர்த்தி, நிதி உதவிகளையும் அரசு உயர்த்த வேண்டும்.
திறன் மேம்பாட்டு திட்டம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்களை கூடுதலாக அமைக்க வேண்டும். உற் பத்தி திறன் வாய்ந்த தொழிற்சாலைகளை ஊக்குவிக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு, கற்றல் மற்றும் வருவாய் ஈட்டும் வசதிகளுடன், பொதுவிடுதி வசதியை மத்திய அரசு உருவாக்க வேண்டும்.
திருப்பூர் மேம்பட, பின்னலாடை தொழில் வளர்ச்சி வாரியம் அமைக்க வேண்டும். நிட்டிங், சாயமிடுதல், பிரின்டிங், ஆடை உற்பத்தி, எம்பிராய்டரி, பேக்கேஜிங் என, பல தொழில்கள் உள்ளன. ஒவ்வொரு பிரிவுகளும், தனித்துவமான சவால்களை சந்தித்து வருகின்றன; சில தொழில் பிரிவினரின், தங்கள் தீர்வுக்காக அரசை அணுக முடிவதில்லை. பின்னலாடை வாரியம் அமையும் போது, பிரச்னைகளுக்கு உடனுக்குடன் தீர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.