/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அ.தி.மு.க. 54வது ஆண்டு துவக்க விழா கொண்டாட்டம்
/
அ.தி.மு.க. 54வது ஆண்டு துவக்க விழா கொண்டாட்டம்
ADDED : அக் 17, 2025 11:56 PM

அவிநாசி: அ.தி.மு.க.வின், 54வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு அவிநாசி தாலுகா அலுவலகம் முன் முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை,எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா படத்துக்கு நகர அ.தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
அதன்பின், கொடியேற்றி இனிப்புகள் வழங்கி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நகர செயலாளர் ஜெயபால் தலைமை வகித்தார். அருண் மகாலிங்கம், ஐ.டி. பிரிவு கோகுல் கார்த்திக், வக்கீல் சுதர்சன், சரவணன், மாணவரணி மோகன்பிரசாத், தியாகு, வார்டு செயலாளர் முஸ்தபா, மல்லீஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அவிநாசி தெற்கு ஒன்றியம் சார்பில், வஞ்சிபாளையம் ரயில்வே கூட்ெஷட்டில் மாநில விவசாய பிரிவு துணைத் தலைவர் சுப்பிரமணியம் தலைமையில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது.
ஒன்றிய செயலாளர் தனபால், பொருளாளர் ரமேஷ், இலக்கிய அணி செயலாளர் ஜெகதீஷ், விவசாயி பிரிவு துணைத் தலைவர் மகாலிங்கம், மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற துணைத் தலைவர் உதயகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.