ADDED : ஏப் 05, 2026 06:36 AM

அ நிறம் | அளவு
பல்லடம்: பல்லடம் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளராக பரமசிவம் போட்டியிடுகிறார்.
நேற்று காலை, 11.00 மணிக்கு இவர் வேட்பு மனு தாக்கல் செய்தார். தொடர்ந்து, அ.தி.மு.க., தேர்தல் பணிமனை திறப்பு விழா நடந்தது.
முன்னாள் அமைச்சர் ராதாகிருஷ்ணன் தேர்தல் பணிமனையை திறந்து வைத்து பேசுகையில்,''தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில் கொண்டு வந்த பல்வேறு திட்டங்களையும் கிடப்பில் போட்டு விட்டனர்.
இவ்வாறு, கிடப்பில் போடப்பட்ட அனைத்து திட்டங்களும், அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் செயல்படுத்தப்படும்,' என்றார்.
பா.ஜ., மாவட்ட தலைவர் சீனிவாசன் மற்றும் அ.தி.மு.க., நகர, ஒன்றிய நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
