/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பொங்கல் கோலத்தில் அ.தி.மு.க., நுாதனம்
/
பொங்கல் கோலத்தில் அ.தி.மு.க., நுாதனம்
ADDED : ஜன 15, 2025 12:48 AM

திருப்பூர்; திருப்பூரில், அ.தி.மு. க.,வை சேர்ந்த பெண்கள், வீட்டின் முன் கோலமிட்டு, 'யார் அந்த சார் என்று எழுதி, நுாதனமாக பொங்கல் பண்டிகையை கொண்டாடினர்.
தைப்பொங்கல் விழா நேற்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு வீட்டிலும், குடும்பம் சகிதமாக பொங்கல் வைத்து, படையலிட்டு வழிபட்டனர். பொங்கல் பண்டிகை என்றாலே, வீடுகளின் முன், பல்வகை வண்ண கோலப்பொடியால், கோலமிட்டு வாசலை அலங்கரிப்பது வழக்கம்.
அவ்வகையில், திருப்பூர் நகரப்பகுதியில் உள்ள, அ.தி.மு.க., மகளிர் அணியினர், புதிய பாணியில் பொங்கல் விழாவை நேற்று கொண்டாடினர். வீட்டின் முன், வழக்கம் போல் பொங்கல் பானை, கரும்பு உருவங்களுடன் கோலமிட்டனர். கோலத்தின் அருகே, 'யார் அந்த சார்?' என்று எழுதி வைத்தனர். 'ேஹப்பி பொங்கல்' என்ற வார்த்தையை காட்டிலும், 'யார் அந்த சார்?' என்ற வாசகங்களை பல வீடுகளின் முன் எழுதி வைத்திருந்தனர்.
இதுகுறித்து பெண்கள் கூறுகையில், 'தைப்பொங்கல் கொண்டாடுவது நமது மரபு; அதை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறோம். இருப்பினும், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு கவனத்தை ஈர்க்கும் வகையில், 'யார் அந்த சார்?' என்று தைப்பொங்கல் நாளில் கேள்வி எழுப்பியிருக்கிறோம்,' என்றனர். அப்பகுதி வழியே சென்ற பொதுமக்கள், கோலத்தை பார்த்து ரசித்தபடியே சென்றது குறிப்பிடத்தக்கது.