/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அகற்றப்படாத அ.தி.மு.க., அலுவலகம்; கிடப்பில் சாக்கடை, சாலை பணிகள்
/
அகற்றப்படாத அ.தி.மு.க., அலுவலகம்; கிடப்பில் சாக்கடை, சாலை பணிகள்
அகற்றப்படாத அ.தி.மு.க., அலுவலகம்; கிடப்பில் சாக்கடை, சாலை பணிகள்
அகற்றப்படாத அ.தி.மு.க., அலுவலகம்; கிடப்பில் சாக்கடை, சாலை பணிகள்
ADDED : ஜூலை 27, 2025 11:43 PM

அனுப்பர்பாளையம்,; திருப்பூர் மாநகராட்சி, 13வது வார்டு, சாமிநாத புரம் ரோடு ஆக்கிரமிப்பால் குறுகி காணப்பட்டது. போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஆக்கிரமிப்பை அகற்றி ரோட்டை விரிவாக்கம் செய்ய அப்பகுதி மக்கள் மாநகராட்சி நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்தனர். மாநகராட்சி அதிகாரிகள் 30 ஆண்டு கால கடை உள்ளிட்ட பல்வேறு ஆக்கிரமிப்புகளை படிப் படியாக அகற்றி சாக்கடை கால்வாய் மற்றும் ரோடு அமைத்து வருகின்றனர்.
இப்பகுதியில், அ.தி.மு.க.,வினர் ரோட்டை ஆக்கிரமித்து தங்கள் அலுவலகத்தை அமைத்து உள்ளனர். இதை அகற்ற மாநகராட்சி சார்பில், அ.தி.மு.க வினருக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றிய அதிகாரிகள் அ.தி.மு.க., அலுவலகத்தை அகற்றாமல் விட்டுள்ளனர். இதனால் அந்த இடத்தில் சாக்கடை கால்வாய் மற்றும் ரோடு அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதிகாரிகள் பாரபட்சமின்றி ஆக்கிரமிப்பை அகற்றி, கிடப்பில் போடப்பட்டுள்ள ரோடு மற்றும் சாக்கடை கால்வாய் பணியை விரைவாக முடிக்க அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.