/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பிரசார பயிற்சி களமாக மாறிய அ.தி.மு.க., திண்ணை பிரசாரம்
/
பிரசார பயிற்சி களமாக மாறிய அ.தி.மு.க., திண்ணை பிரசாரம்
பிரசார பயிற்சி களமாக மாறிய அ.தி.மு.க., திண்ணை பிரசாரம்
பிரசார பயிற்சி களமாக மாறிய அ.தி.மு.க., திண்ணை பிரசாரம்
ADDED : ஜூலை 13, 2025 12:25 AM

திருப்பூர் : மாவட்டம் தோறும் ஜெயலலிதா பேரவை சார்பில், வாரந்தோறும் திண்ணை பிரசாரம் நடந்து வருகிறது. கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக நடக்கும் திண்ணை பிரசாரம், தெருமுனை பிரசாரமாக மாறி, தற்போதிருந்தே சட்டசபை தேர்தலுக்கான முன்மாதிரி பிரசாரமாக மாறியுள்ளது.
திருப்பூர் மாநகர் மாவட்டத்தில், ஜெ., பேரவை மாவட்ட செயலாளர் லோகநாதன் தலைமையில், மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் முன்னிலையில், வாரம் தோறும் வெள்ளிக்கிழமை, திண்ணை பிரசாரம் களைகட்டிக்கொண்டிருக்கிறது.
குறிப்பாக, திருப்பூர் மாநகராட்சியில் ஏற்பட்டுள்ள சொத்துவரி உயர்வு, குப்பை வரி, தண்ணீர் வரி உயர்வு குறித்து, பெண்களிடம் எடுத்துரைக்க 'அட்வைஸ்' செய்யப்பட்டுள்ளது. விலைவாசி உயர்வை, அ.தி.மு.க., ஆட்சியுடன் ஒப்பிட்டு, முக்கிய திட்டம் ரத்து செய்யப்பட்டது குறித்தும் விலாவாரியாக அலசி வருகின்றனர்.
மாலை நேர பிரசாரம் என்பதால், தொழிலாளர்களை கவரும் வகையில், டீக்கடைகள், மார்க்கெட் பகுதிகள், முக்கிய வீதிகள் சந்திப்பு பகுதிகள் என, திண்ணை பிரசாரம் நடந்து வருகிறது. இதன்மூலமாக, வார்டுக்குள், அ.தி.மு.க., வினரின் நுாதன போராட்டம் ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று சேர்கிறது.
தேர்தல் அறிவித்த உடனே, பிரசார வாகனத்தில் புறப்பட வேண்டும்; வீதிவீதியாக சுற்றி, அ.தி.மு.க., ஆட்சியின் சாதனைகளையும், தி.மு.க., ஆட்சியால் ஏற்பட்ட சோதனைகளையும் விளக்கி பேச வேண்டும் என, இளம் பேச்சாளர்களும் தயாராகிவருகின்றனர்.
வாராந்திர திண்ணை பிரசாரமே, புதிய பேச்சாளர்களை உருவாக்கும் பயிற்சி களமாகவும் மாறியிருப்பதாக, கட்சியினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.