/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பனியன் தொழிலாளருக்கு புதிய சம்பளம்; கோரிக்கை கடிதம் வழங்கிய ஏ.ஐ.டி.யு.சி.,

ADDED : ஆக 11, 2025 11:32 PM
திருப்பூர்; ஏ.ஐ.டி.யு.சி., பனியன் சங்க பொதுக்குழு நேற்று முன்தினம் நடந்தது. நிர்வாகி குமரேசன் தலைமை வகித்தார். செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் பேசினர். பொதுசெயலாளர் சேகர், கூட்டத்தின் நோக்கம் குறித்து பேசினார்.
பனியன் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு ஒப்பந்தம், செப்., மாதம் நிறைவடைகிறது. புதிய ஊதிய உயர்வு உள்ளிட்ட, 16 அம்ச கோரிக்கைகள் குறித்து பொதுக்குழுவில் விவாதிக்கப்பட்டது. அதன்படி, கோரிக்கை கடிதம் தயாரித்து, நேற்று முதல் தொழில் அமைப்புகள் மற்றும் உற்பத்தியாளர் சங்கங்களுக்கு வழங்கப்பட்டது.
வரும், அக்., 1 முதல் புதிய சம்பள ஒப்பந்தம் உருவாக வேண்டும். 'வளர்மதி' கூட்டுறவு சங்கத்தில் பெற்ற விலைவாசி புள்ளிவிவரத்துடன், கோரிக்கை கடிதம் தயாரிக்கப்பட்டுள்ளது.
பஞ்சப்படி, பயணப்படி, டீ பேட்டா, வீட்டு வாடகை, திருமணம் மற்றும் கல்வி உதவி, குடும்ப நல உதவி, குரூப் இன்சூரன்ஸ், சுற்றுலா அலவன்ஸ் உட்பட, 16 அம்ச கோரிக்கைகளுடன், சம்பள உயர்வு கோரிக்கை தொடர்பாக, தொழில் அமைப்புகளிடம், நேற்று கடிதம் வழங்கப்பட்டுள்ளதாக, ஏ.ஐ.டி.யு.சி., நிர்வாகிகள் தெரிவித்தனர்.