/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அஜித்குமார் அடித்து கொலை; நா.த.க., கண்டன ஆர்ப்பாட்டம்
/
அஜித்குமார் அடித்து கொலை; நா.த.க., கண்டன ஆர்ப்பாட்டம்
அஜித்குமார் அடித்து கொலை; நா.த.க., கண்டன ஆர்ப்பாட்டம்
அஜித்குமார் அடித்து கொலை; நா.த.க., கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 04, 2025 12:52 AM

திருப்பூர்; திருப்புவனத்தில் கோவில் காவலாளி அஜித்குமார் போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, நாம் தமிழர் கட்சி சார்பில், திருப்பூர், மாநகராட்சி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு, மாநில ஒருங்கிணைப்பாளர் சிவகுமார் தலைமை வகித்தார். தொழிற்சங்க இணை செயலாளர் சுரேஷ்பாபு உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாநில மகளிர் பாசறை பொறுப்பாளர் அபிநயா, மாநில ஒருங்கிணைப்பாளர் ரத்னா மனோகர், மாநில கொள்கை பரப்பு செயலாளர்கள் ராஜ்மோகன், கொற்றை சிவா, மாநில இளைஞர் பாசறை பொறுப்பாளர் ஷேக் ஆகியோர் கோரிக்கையை விளக்கிப் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில்,'கோவில் காவலாளி அஜித்குமார் வழக்கில் எவ்வித முகாந்திரமும் இல்லாமல், போலீசார் அத்துமீறியுள்ளனர். முதல்வரின் கையில் காவல் துறை இருந்தும், லாக்கப் மரணம் நடந்துள்ளது. இதில் ஈடுபட்ட போலீசாருக்கு கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும்,' என ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் பேசினர்.