/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'ஆபரேஷன் சிந்துார்' வெற்றி பெற அகண்ட மஹாமந்த்ர கீர்த்தனம்
/
'ஆபரேஷன் சிந்துார்' வெற்றி பெற அகண்ட மஹாமந்த்ர கீர்த்தனம்
'ஆபரேஷன் சிந்துார்' வெற்றி பெற அகண்ட மஹாமந்த்ர கீர்த்தனம்
'ஆபரேஷன் சிந்துார்' வெற்றி பெற அகண்ட மஹாமந்த்ர கீர்த்தனம்
ADDED : மே 10, 2025 07:52 AM
உடுமலை: 'ஆபரேஷன் சிந்துார்' வெற்றி பெற, அகண்ட மஹாமந்த்ர கீர்த்தனம், வரும் 11ம் தேதி, தமிழகம் முழுவதும் 'காட் நாமத்வார்' அமைப்பு சார்பில் நடக்கிறது.
பாகிஸ்தான் பயங்கரவாதத்திற்கு எதிராக, இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்துார்' வாயிலாக நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்திய அரசையும், ராணுவத்தையும் வணங்கும் வகையிலும், பாரதத்தின் வெற்றி, பாதுகாப்பு மற்றும் முப்படை வீரர்களுக்கு ஆதரவை தெரிவிக்கும் வகையிலும், மஹாரண்யம் ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜி அமைப்பான, 'குளோபல் ஆர்கனைசேஷன் பார் டிவினிட்டி' ( காட்) - நாமத்வார் அமைப்பு சார்பில், உடுமலை உட்பட, தமிழகத்திலுள்ள 43 மையங்கள் மற்றும் கிராமங்களிலுள்ள நுாற்றுக்கணக்கான நாம கேந்திரா மையங்களில், 'ஆபரேஷன் சிந்துார்' வெற்றியடைய, வரும் 11ம் தேதி, காலை, 6:00 மணி முதல், மாலை, 6:00 மணி வரை, 'அகண்ட மஹாமந்த்ர கீர்த்தனம்' நிகழ்ச்சி நடக்கிறது.
இதில், நாட்டிற்காக அனைத்து மக்களும் பிரார்த்தனை செய்ய வேண்டும், என காட்- நாமத்வார் அமைப்பு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.