/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அக்கம்மாள் கோவில் கும்பாபிேஷகம் :திரளான பக்தர்கள் சுவாமி வழிபாடு
/
அக்கம்மாள் கோவில் கும்பாபிேஷகம் :திரளான பக்தர்கள் சுவாமி வழிபாடு
அக்கம்மாள் கோவில் கும்பாபிேஷகம் :திரளான பக்தர்கள் சுவாமி வழிபாடு
அக்கம்மாள் கோவில் கும்பாபிேஷகம் :திரளான பக்தர்கள் சுவாமி வழிபாடு
ADDED : பிப் 22, 2024 10:18 PM

உடுமலை:உடுமலை அருகே ராகல்பாவி ஊராட்சி வேலுார் கிராமத்தில், ஸ்ரீ சித்தவநாயுடு - ஸ்ரீ கோணம்மாள், ஸ்ரீ நாரப்பநாயுடு - ஸ்ரீ சித்தம்மாள், ஸ்ரீ அக்கம்மாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிேஷ விழா கடந்த 20ம் தேதி துவங்கியது.
முதல் நாள் மாலையில், கோவிலில் தேவதா அனுக்ஞை, மகாசங்கல்பம், வாஸ்துசாந்தி, கும்பஸ்தாபனம், யாகசாலை பிரவேசம் உள்ளிட்ட பூஜைகளும், மாலை, 6:00 மணிக்கு மேல் முதற்கால ேஹாமம், தீபாராதனை நடந்தது.
நேற்று முன்தினம் காலை, 9:00 மணிக்கு வேதபாராயணம், யாகசாலை திருவாதாரன பூஜைகளும், இரண்டாம் காலை ேஹாமம், தீபாராதனையும், மாலை, 4:00 மணிக்கு மூன்றாம் கால ேஹாமமும் நடந்தன.
இரவு எண்வகை மருந்து சாற்றுதல் வழிபாடு நடந்தது. நேற்று காலை, 7:45 மணிக்கு நான்காம் கால ேஹாமமும், காலை, 9:30 மணிக்கு சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரத்துடன் மகா கும்பாபிேஷகமும் நடந்தது. தொடர்ந்து சுவாமிகளின் திருக்கல்யாண உற்சவம், அபிேஷக அலங்கார பூஜை நடந்தது.
கும்பாபிேஷகத்தில் மேலகோட்டை ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் பங்கேற்றார். மண்டல பூஜைகள் இன்று முதல் துவங்குகிறது.