ADDED : ஆக 15, 2025 11:56 PM

திருப்பூர்; சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுக்கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், மதுப் பிரியர்கள் வசதிக்காக, பல பகுதிகளிலும் ரகசியமாகவும், சில இடங்களில் வெளிப்படையாகவும் மது பாட்டில்கள் விற்பனை நடந்தது.
மதுக்கடைகள், பார்கள் அமைந்துள்ள இடங்களின் அருகே, மறைவான இடங்களில் மூட்டைகளிலும், அட்டைப் பெட்டிகளிலும், மது பாட்டில்கள் கொண்டு வந்து விற்பனை செய்யப்பட்டன.
அனைத்து மது பாட்டில்களும் வியாபாரிகள் சொன்ன விலைக்கே மது பிரியர்கள் வாங்கிச் சென்றனர். காங்கயம் வாரச் சந்தை வளாகம், சேவூர் ஆகிய இடங்களில் கட்டில் போட்டு அமர்ந்தும், மரத்தடியில் வைத்தும் சாக்கு மூட்டைகளில் போட்டுக் கட்டி வைத்து மது பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டது. ஒரு சில இடங்களில் இது போன்ற சட்ட விரோத மது விற்பனை குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.