/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மது விற்பனை அமோகம்; கண்டுகொள்ளாத போலீஸ்
/
மது விற்பனை அமோகம்; கண்டுகொள்ளாத போலீஸ்
ADDED : ஏப் 10, 2025 11:53 PM
காங்கயம்; மகாவீர் ஜெயந்தியையொட்டி இறைச்சி கடை, மதுக்கடைகளுக்கு விடுமுறை நேற்று அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால், காங்கயம், வெள்ளகோவில் உள்ளிட்ட மாவட்டத்தின் பல பகுதிகளில் சட்டவிரோதமாக மதுவிற்பனை ஜோராக நடந்தது.
இதை போலீசார் கண்டுகொள்ளாமல் இருந்தனர். பெயருக்கு மட்டும் ஒன்றிரண்டு நடவடிக்கை எடுத்து விட்டு, மற்றவற்றை கண்டுகொள்ளவில்லை என்பது மக்கள் புகாராக இருந்தது.
காங்கயம் வாரச்சந்தை, கரூர் ரோடு, வாய்க்கால்மேடு என பகுதிகளில் காலை முதலே மது விற்பனை இருந்தது. மூட்டை, மூட்டையாக வித விதமான மதுவகைகள், தங்கு தடையின்றி விற்பனை இருந்தது. குவாட்டர் பாட்டில், 300 ரூபாய் வரை கூடுதலாக விற்பனை செய்யப்பட்டது.
மதுவிற்பனை குறித்து சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்திருந்தனர்.