/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆல்கொண்டமால் கோவில் திருவிழா வரும் 15ல் துவக்கம்
/
ஆல்கொண்டமால் கோவில் திருவிழா வரும் 15ல் துவக்கம்
ADDED : ஜன 12, 2025 11:12 PM
உடுமலை; உடுமலை அருகே சோமவாரப்பட்டியில் பழமை வாய்ந்த ஆல்கொண்டமால் கோவில் அமைந்துள்ளது. பொங்கலையொட்டி, மூன்று நாட்கள் நடக்கும் தமிழர் திருநாள் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
கால்நடை வளம் பெருகவும், அவற்றுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படவும், உருவார பொம்மைகளை வைத்து வழிபாடு செய்கின்றனர்; சுவாமிக்கு பாலாபிேஷகம் செய்து வழிபடுகின்றனர்.
கோவிலில், வரும் 15ம் தேதி தமிழர் திருநாள் திருவிழா துவங்குகிறது. அன்று அதிகாலை 5:00 மணிக்கு, சிறப்பு அலங்காரம், தீபாரதனையுடன் விழா துவங்குகிறது. பகல் 11:00 மணிக்கு, சிறப்பு பூஜையும், மாலை 6:00 மணிக்கு, உழவர் திருநாள் சிறப்பு பூஜையும் நடைபெறுகிறது.
வரும், 16ம் தேதி, பகல் 11:00 மணிக்கு சிறப்பு பூஜையும், வரும் 17ம் தேதி, அதிகாலை 5:00 மணிக்கு சிறப்பு அலங்காரம்; மாலை 6:00 மணிக்கு மகா அபிேஷகம், இரவு 7:00 மணிக்கு மகா தீபாராதனை, இரவு 9:00 மணிக்கு, சுவாமி திருவீதி உலா, வான வேடிக்கை நிகழ்ச்சி நடக்கிறது.