ADDED : செப் 20, 2024 05:58 AM
இந்தாண்டு நவராத்திரி திருவிழா, அக்., 3ல் துவங்கி, 12ம் தேதி வரை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இத்திருவிழாவில் பொதிந்துள்ள ஆன்மிக அம்சங்களை ஆழமாக கண்டுணர்ந்து, மூன்று முக்கியமான தன்மைகள், இந்த ஒன்பது நாட்களில் வெளிப்படுகிறது.
நவராத்திரி வழிபாடு சக்தி மகிமையை விளக்கும் மனிதனின் முக்கிய தேவைகளான கல்வி, செல்வம், வீரம் இம்மூன்றையும் வேண்டி அவற்றுக்கு அதிபதிகளான சரஸ்வதி, லஷ்மி, துர்கை என்று மூன்று சக்தி அம்சங்களையும் வழிபடுதலே இவ்விரத்தின் நோக்கமாகும்.
அடுத்த மூன்று நாட்களும் செல்வத்தை வேண்டி மஹாலஷ்மியை வழிபடவேண்டும். இறுதி மூன்று நாட்களும் கல்வி, அறிவு, சகல கலை ஞானங்கள் என்பவற்றை வேண்டி சரஸ்வதி தேவியை வழிபட வேண்டும்.
நவராத்திரி பூஜையை துாய்மையுடனும் அழகுப் பொலிவுடனும் திகழும் கொலு மண்டபத்தை அமைத்து பூர்வாங்க பூஜைகளுடனும், சங்கல்ப பூர்வமாகவும் முறைப்படி கும்பத்தை ஸ்தாபிக்க வேண்டும்.