/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
துணை தாசில்தார்களுக்கு பணியிடங்கள் ஒதுக்கீடு
/
துணை தாசில்தார்களுக்கு பணியிடங்கள் ஒதுக்கீடு
ADDED : ஆக 25, 2025 09:19 PM
- நமது நிருபர் -
திருப்பூர் மாவட்டத்தில் வருவாய்த்துறையில் பதவி உயர்வு பெற்ற துணை தாசில்தார்கள், துறைரீதியான போலீஸ் துறை பயிற்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பயிற்சி முடித்து வந்த துணை தாசில்தார்களுக்கு பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் சில துணை தாசில்தார்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை, கலெக்டர் பிறப்பித்துள்ளார்.
பணியிடம் ஒதுக்கீடு ஜாபர் அலி, கலெக்டர்அலுவலக தேர்தல் பிரிவு துணை தாசில்தார் - 1; அன்பரசு, பல்லடம் தேர்தல் பிரிவு துணை தாசில்தார்; தீனதயாளன், தேர்தல் பிரிவு துணை தாசில்தார், உடுமலை; சிவசக்தி, தலைமை உதவியாளர், திருப்பூர் ஆர்.டி.ஓ., அலுவலகம்; ஜெனிட்டா, கலெக்டர் அலுவலகம் 'உ' பிரிவு தலைமை உதவியாளர்.
விடுப்பிலிருந்து வந்த கீர்த்தி பிரபா, ஊத்துக்குளி வட்ட வழங்கல் அலுவலராகவும், அழகரசன், கலெக்டர் அலுவலக 'ஓ' பிரிவு தலைமை உதவியாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பணியிடம் மாற்றம் உடுமலை தேர்தல் துணை தாசில்தார் சையது ராபியம்மாள் உடுமலை தலைமையிடத்து துணை தாசில்தாராகவும், திருப்பூர் ஆர்.டி.ஓ., அலுவலகத் தலைமை உதவியாளர் அருள்குமார், பிற்பட்டோர் நல அலுவலக தலைமை உதவியாளராகவும், கலெக்டர் அலுவலக 'ஓ' பிரிவு விஷ்ணுகண்ணன், வடக்கு தாலுகா மண்டல துணை தாசில்தாராகவும் மாற்றப்பட்டனர்.
காங்கயம், தேர்தல் துணை தாசில்தார் சிவசுப்ரமணியம் திருப்பூர் வடக்கு தேர்தல் துணை தாசில்தாராகவும், வடக்கு மண்டல துணை தாசில்தார் பரமேஸ் காங்கயம் தேர்தல் துணை தாசில்தாரராகவும், காங்கயம் தலைமையிடத்து துணை தாசில்தார் வனிதா மண்டல துணை தாசில்தாராகவும், மாவட்ட பிற்பட்டோர் நல தலைமை உதவியாளர் பபிதா திருப்பூர் கலெக்டர் அலுவலக தேர்தல் துணை தாசில்தார் -2 ஆகவும் இடம் மாற்றம் செய்யப்பட்டனர்.