/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பஞ்சலிங்க அருவியில் குளிக்க அனுமதி
/
பஞ்சலிங்க அருவியில் குளிக்க அனுமதி
ADDED : நவ 17, 2024 09:50 PM

உடுமலை; சீரான நீர் வரத்து இருந்ததால், பஞ்சலிங்க அருவிக்கு செல்ல சுற்றுலா பயணியருக்கு நேற்று அனுமதி வழங்கப்பட்டது.
உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலை, ஆன்மிக மற்றும் சுற்றுலா தலமாக உள்ளது.இங்குள்ள பஞ்சலிங்க அருவிக்கு, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர்.
வடகிழக்கு பருவமழை சீசன் துவங்கியதில் இருந்து, பஞ்சலிங்க அருவியில், அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
எனவே, பாதுகாப்பு காரணங்களுக்காக அருவிக்கு செல்ல சுற்றுலா பயணியருக்கு தடை விதிக்கப்பட்டது. நேற்று காலை அருவியில் சீரான நீர் வரத்து இருந்தது; மலைத்தொடரிலும் மழைப்பொழிவு இல்லாததால், பஞ்சலிங்க அருவியில், குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.
இதையடுத்து, நுாற்றுக்கணக்கான சுற்றுலா பயணியர் உற்சாகத்துடன் அருவியில் குளித்து மகிழ்ந்தனர். அமணலிங்கேஸ்வரர் கோவிலிலும், பக்தர்கள் கூட்டம் கூடுதலாக இருந்தது. அருவி மற்றும் வழித்தடங்களில், கோவில் பணியாளர்கள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.