ADDED : பிப் 03, 2024 11:35 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்:அண்ணாதுரை நினைவு நாளான நேற்று, திருப்பூர் மாவட்டத்தில், 29 கோவில்களில், அன்னதானம் வழங்கப்பட்டது.
முன்னாள் முதல்வர் அண்ணாதுரை நினைவு நாளில், தமிழக அரசு சார்பில், ஹிந்து சமய அறநிலையத்துறை பராமரிக்கும் கோவில்களில், அன்னதானம் வழங்குவது வழக்கம். அதன்படி, அவரின் நினைவு நாளான நேற்று, மாவட்டத்தில் உள்ள, 29 கோவில்களில், அன்னதானம் வழங்கப்பட்டது.
சிவன்மலை ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோவில், பெருமாநல்லுார் கொண்டத்துக்காளியம்மன் கோவில், அய்யன்கோவில் உட்பட, 29 கோவில்களில், தலா 300 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் நடந்த அன்னதானம், மதியம், 12:00 மணிக்கு துவக்கி வைக்கப்பட்டது. செயல் அலுவலர் சரவணபவன், ஆய்வாளர் கணபதி ஆகியோர், துவக்கி வைத்தனர்.