UPDATED : செப் 27, 2026 09:13 PM
ADDED : செப் 27, 2026 09:10 PM
அ நிறம் | அளவு
திருப்பூர்: மத்திய அரசின் திட்டங்களால் ஈர்க்கட்ட, 200 பேர் மாற்று கட்சிகளில் இருந்து விலகி, பா.ஜ.,வில் இணைந்தனர்.
திருப்பூர் மாவட்ட பா.ஜ., அலுவலகத்தில், மாற்று கட்சியில் இணையும் விழா நடந்தது. மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். வழக்கறிஞர்கள் மாரிமுத்து, தினேஷ், அஜிஸ், ராம்பிரசாத், கார்த்திக் ராஜா ஆகியோர் ஏற்பாட்டில், 214 பேர், மாற்று கட்சிகளில் இருந்து விலகி, தங்களை பா.ஜ.,வில் இணைத்துக்கொண்டனர்.
தமிழக மக்களுக்கு மத்திய அரசு செயல்படுத்தும் திட்டங்களால் ஈர்க்கப்பட்டு, கட்சியில் சேர்ந்ததாக கூறினர். மாநில செயலாளர் மலர்க்கொடி, மாநில செயற்குழு உறுப்பினர் செந்தில்வேல் உள்ளிட்ட நிர்வாகிகளும் பங்கேற்றனர்.
