/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'நெருப்பில்லா சமையல்' அசத்தும் படைப்புகள்
/
'நெருப்பில்லா சமையல்' அசத்தும் படைப்புகள்
ADDED : நவ 07, 2025 08:51 PM

உடுமலை: காரத்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளியில், நெருப்பில்லா சமையல் என்ற தலைப்பில் உணவுத்திருவிழா நடந்தது.
மடத்துக்குளம் தாலுகா, காரத்தொழுவு அரசு மேல்நிலைப் பள்ளியில், 750க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். ஆண்டுதோறும் இப்பள்ளியில் உணவு திருவிழா நடைபெறுகிறது.
இந்தாண்டு, நெருப்பில்லா சமையல் என்ற தலைப்பில் இத்திருவிழா நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியர் கார்த்திகேயன் தலைமை வகித்தார்.
விழாவில், 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று, காய்கறிகள், பழங்கள், தானியங்கள், திணை வகைகள் போன்ற பொருட்களை பயன்படுத்தி தங்கள் படைப்புகளை கொண்டு வந்திருந்தனர்.
தமிழகத்தின் பாரம்பரிய பண்பாடு, உணவு கலாசாரத்தை பெருமைப்படுத்தும் வகையில் விழா நடந்தது. பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பார்வையிட்டனர்.
முதல் மூன்று இடங்களை பிடித்த குழு மாணவர்களுக்கு பரிசுப் பொருட்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. பள்ளியின் உதவி ஆசிரியர் சையது முகமது குலாம் தஸ்தகிர் நன்றி தெரிவித்தார். ஏற்பாடுகளை ஜே.ஆர்.சி., பொறுப்பாளர் கார்த்திகேயன் செய்திருந்தார்.

