ADDED : செப் 20, 2024 10:12 PM
உடுமலை : உடுமலை குமரலிங்கத்தில், திருப்பூர் புறநகர் மாவட்ட அ.ம.மு.க., சார்பில், அண்ணாதுரை பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் ராஜ்குமார் தலைமை வகித்தார்.
இதில், மாநில துணை பொதுச்செயலாளர் சண்முகவேலு பேசியதாவது:
மூன்று மாவட்ட கரும்பு விவசாயிகளுக்கு ஆதாரமாக உள்ள, அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை, இரு ஆண்டுகளாக இயங்காமல் உள்ளது. இதனால், கரும்பு விவசாயிகள், ஆலை தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, தமிழக அரசு உடனடியாக ஆலை இயந்திரங்களை புதுப்பிக்க, நிதி ஒதுக்க வேண்டும். பொள்ளாச்சி - திண்டுக்கல் நான்கு வழி சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
இவ்வாறு, பேசினார்.
இதில், நிர்வாகிகள் மணிகண்டன், ராஜேந்திரன், குமரலிங்கம் பேரூர் கழகச்செயலாளர் சிவலிங்கம், மடத்துக்குளம் சட்டசபை தொகுதி பொறுப்பாளர் வெங்கிடு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.