/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கோவை - தன்பாத் இடையே அம்ரித் பாரத் ரயில்
/
கோவை - தன்பாத் இடையே அம்ரித் பாரத் ரயில்
ADDED : பிப் 26, 2026 06:52 AM
திருப்பூர்: மார்ச் முதல் வாரம் கோவை - தன்பாத் புதிய அம்ரித் பாரத் ரயில் இயக்கம் துவக்கி வைக்கப்பட உள்ளது.
கோவையில் இருந்து ஜார்கண்ட் மாநிலம், தன்பாத்துக்கு புதிய அம்ரித் பாரத் ரயில் சேவை, மார்ச் முதல் வாரம் துவங்கப்படஉள்ளது. மங்களூரு - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ்ரயில் சேவையுடன் சேர்த்து, இதுவும் துவங்குகிறது. பிரதமர் மோடி புதிய ரயில்கள் இயக்கத்தை துவக்கி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த மாதம் நாகர்கோவில் - நியூஜல்பைகுரி அம்ரித் பாரத் ரயில் இயக்கம் துவங்கப்பட்டது. இந்த ரயில் கோவை, திருப்பூர்,ஈரோடு வழியாக பயணிக்கிறது. கோவையில் இருந்து புறப்படும் முதல் அம்ரித் பாரத் ரயிலாக தன்பாத் ரயில் இருக்கும்.
பயன் என்ன? இந்த ரயில் திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி ஸ்டேஷன்கள் கடந்து, ஆந்திரா, ஒடிசா மாநிலங்கள் வழியாக பயணித்து, ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் செல்கிறது. ஆலப்புழா - தன்பாத்ரயில் - எண்:13352, மட்டுமே கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக தன்பாத்துக்கு பயணிக்கும் ரயிலாக உள்ளது. நான்கு முன்பதிவில்லா பொது பெட்டிகளை கொண்ட இந்த ரயிலில், எப்போதுமே கூட்டம் நிறைந்து வழிகிறது.
ஆலப்புழாவில் இருந்து ரயில் புறப்படுவதால், டிக்கெட் முன்பதிவில் இடம் கிடைப்பதும் சிரமமாக உள்ளது. இந்நிலையில், கோவை - தன்பாத்அம்ரித் பாரத் புதிய ரயில்கூடுதல் முன்பதிவில்லா பொது பெட்டிகள் கொண்டதாக இருக்கும் என்பதால், பயணியர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

