/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'அம்ரூத் பாரத்' திட்ட பணி வேகம்
/
'அம்ரூத் பாரத்' திட்ட பணி வேகம்
ADDED : அக் 10, 2024 06:17 AM

திருப்பூர்: திருப்பூர் ரயில் நிலையத்தில், ரயில் விட்டு இறங்கி வரும் பயணிகள் வெளியேற வழியில்லாமல் நெரிசலில் சிக்கி தவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டு வருவதால், அதனை தவிர்க்க, முதல் பிளாட்பார்ம் கட்டுமான பணியை நிறைவு செய்து, டிக்கெட் கவுன்டர் செயல்பட ஏற்பாடு செய்யப்பட உள்ளது.
'அம்ரூத் பாரத்' திட்டத்தின் கீழ், ரயில்வே ஸ்டேஷன் மேம்படுத்தும் பணி துவங்கி ஓராண்டாக நடந்து வருகிறது. முதல் மற்றும் இரண்டாவது பிளாட்பார்ம் வெளிப்புறம் பணிகள் நடந்து, 50 சதவீதம் முடிந்துள்ளது. டிக்கெட் கவுன்டர், ஸ்டேஷன் மாஸ்டர் அறை அருகே அகழ்வு இயந்திரம் மூலம் பணி மேற்கொள்ளப்பட்டது.
கட்டுமான பணி காரணமாக, நுழைவு வாயில் வழியாக எளிதில் உள்ளே வந்து செல்ல முடியாத நிலை உள்ளது. ரயில் விட்டு இறங்கும், 500 க்கும் அதிக மானோர் ஒரு பாதை வழியாக வெளியேற, ஒரு மணி நேரத்துக்கு மேலாகிறது; அதற்குள் மற்றொரு ரயில் வந்து பிளாட்பார்மில் கூட்டம் அதிகமாகி விடுகிறது.
எனவே, சிரமத்தை தவிர்க்க முதல் பிளாட்பார்ம் டிக்கெட் கவுன்டர் திறக்க தேவையான பணிகள் துவங்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, முதல் பிளாட்பார்ம் அருகே கட்டுமான பணிகள் துவங்கப்பட்டுள்ளது.

