ADDED : மார் 12, 2024 04:17 AM
அ நிறம் | அளவு
ஈரோடு: தமிழகத்தில் அதிகரித்து விட்ட போதை பொருட்கள் நடமாட்டத்தை ஒடுக்க வேண்டும். டி.என்.பி.எஸ்.சி., அமைப்புக்கு தலைவரை நியமிக்க வேண்டும் என்று கூறியும், அ.ம.மு.க., சார்பில் ஈரோடு, வீரப்பன்சத்திரத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் சிவபிரசாந்த் தலைமை வகித்தார்.
மாநகர் மேற்கு மாவட்ட செயலாளர் வெங்கடேசன், புறநகர் மாவட்ட செயலாளர் சதாசிவமூர்த்தி, புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் சரவணக்குமார், அமைப்பு செயலாளர் துளசிமணி, நெசவாளர் அணி செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க., அரசை கண்டித்தகு கோஷமிட்டனர்.
இலக்கிய அணி மாவட்ட செயலாளர் சரஸ்வதி, பகுதி செயலாளர்கள் விஜய் ஆன்ந்த், குமார் உள்பட நுாற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
