/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இசையால் கட்டிப்போட்ட 11 வயது சிறுமி
/
இசையால் கட்டிப்போட்ட 11 வயது சிறுமி
ADDED : டிச 27, 2025 06:23 AM

பல்லடம்: பல்லடம் வனம் அமைப்பின் வான்மழை மாதாந்திர கருத்தரங்கம் வனாலயம் அடிகளார் அரங்கில் நேற்று நடந்தது.
தலைவர் சுவாதி கண்ணன் தலைமை வகித்தார். செயலாளர் சுந்தரராஜ் வரவேற்றார். ராம்ராஜ் காட்டன் நிறுவனர் நாகராஜன், வனம் அமைப்பின் செயல் தலைவர் பாலசுப்பிரமணியன், இணை செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, ஆன்மீக பிரிவு இயக்குனர் அனந்தகிருஷ்ணன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
பொள்ளாச்சி பி.ஏ., கல்வி நிறுவனங்களின் தலைவர் அப்புக்குட்டி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
கேரள மாநிலம், மலப்புரத்தைச் சேர்ந்த இளம் வயலின் இசைக்கலைஞர் கங்கா சசிதரனின் இசை நிகழ்ச்சி நடந்தது. கடம் வித்வான் மாஞ்சூர் உண்ணிகிருஷ்ணன், தவில் வித்வான் திருப்புணித்துரா ஸ்ரீகுமார், ரிதம் பேட் இசைக் கலைஞர் விஜயகுமார், கீபோர்ட் வித்வான் சுனில் குமார் உள்ளிட்ட இசை கலைஞர்களும் பங்கேற்றனர்.
அய்யப்பனின் ஹரிவராசனம் உட்பட, பல்வேறு ஆன்மிக பாடல்களை தனது வயலின் மூலம் இசைத்த கங்கா சசிதரன், இரண்டு மணி நேரத்துக்கு மேல் அனைவரையும் தனது இசையால் கட்டிப்போட்டார். இசைக்கலைஞர்கள் அனைவருக்கும் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். பொருளாளர் விஸ்வநாதன் நன்றி கூறினார்.

