/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விபத்தில்லா தீபாவளி மருத்துவத்துறை நிம்மதி
/
விபத்தில்லா தீபாவளி மருத்துவத்துறை நிம்மதி
ADDED : நவ 02, 2024 11:07 PM
திருப்பூர்: நடப்பாண்டு தீபாவளி, பெரும் விபத்தில்லா தீபாவளியாக முடிந்ததால், மாவட்ட மருத்துவம் மற்றும் சுகாதார நலப்பணிகள் துறையினர் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
தீபாவளியை முன்னிட்டு தீக்காய விபத்து மற்றும் தடுப்பு நடவடிக்கைக்கு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிறப்பு வார்டு, கடந்த, அக்., 29 ம் தேதியே ஏற் படுத்தப் பட்டது. மூன்று டாக்டர், ஆறு செவிலியர் உட்பட குழு அமைக்கப்பட்டது. திடீரென தீக்காயம் ஏற்பட்டு, அதிக பேர் வந்தால், உடனடி சிகிச்சை அளிக்க, 15 படுக்கை வசதி, ஆப்ரேஷன் தியேட்டர், உயர்சிகிச்சைக்கு பரிந்துரைக்க ஆம்புலன்ஸ்கள் தயார்படுத்தப் பட்டிருந்தன.
நல்வாய்ப்பாக, தீபாவளி நாளில் இரண்டு தீக்காயங்கள், பட்டாசு சிதறி வந்து கண்ணில் பட்டதாக இருவர் மட்டுமே சிகிச்சைக்கு வந்தனர். அவர்களுக்கு முதலுதவி செய்யப்பட்டு, சிறுகாயம் என்பதால், அன்றைய தினம் மாலையே 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர். திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மட்டுமின்றி, காங்கயம் அரசு தலைமை அரசு மருத்துவமனை, தாலுகா அளவிலான அரசு மருத்துவமனைகளில் பட்டாசு, தீக்காயம் பட்டு தொடர் சிகிச்சை பெறும் நிலையில் யாரும் நேற்றிரவு வரை அனுமதியாகவில்லை. இதனால், மாவட்ட மருத்துவம் மற்றும் சுகாதார நலப்பணிகள் துறையினர் நிம்மதி அடைந்தனர்.