/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கலைத்திருவிழா என்றொரு துவக்கம்; மாணவர் திறன் உணரும் மகத்துவம்
/
கலைத்திருவிழா என்றொரு துவக்கம்; மாணவர் திறன் உணரும் மகத்துவம்
கலைத்திருவிழா என்றொரு துவக்கம்; மாணவர் திறன் உணரும் மகத்துவம்
கலைத்திருவிழா என்றொரு துவக்கம்; மாணவர் திறன் உணரும் மகத்துவம்
ADDED : ஆக 29, 2025 10:41 PM

க லை என்பது நம்முள் அக வெளிச்சம் ஏற்படுத்த வல்ல மெய்யறிதல். கலையார்வம் மனித வாழ்க்கையை அர்த்த முள்ளதாக்குகிறது. பள்ளிகள் அளவிலான கலைவிழாக்கள் சிறு துவக்கம்; அது மாணவர்கள் பலரது வாழ்வில் ஒளியூட்டும்; தன்னம்பிக்கையை ஏற்படுத்தும்.
பெரியாயிபாளையம் குறுவள மைய அளவிலான கலைத்திருவிழா போட்டி, 'பசுமையும், பாரம்பரியமும்' என்ற தலைப்பில், அம்மாபாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் பாலகிருஷ்ணன், வரவேற்றார். அவிநாசி வட்டார கல்வி அலுவலர் திருநாவுக்கரசு துவக்கி வைத்தார்.
வட்டார வள மைய ஆசிரியப் பயிற்றுனர் சுரேஷ், முன்னிலை வகித்தார். போட்டியில், 13 பள்ளிகளைச் சேர்ந்த, 320 மாணவ, மாணவியர் தனி மற்றும் குழு போட்டிகளில் பங்கேற்றனர். மொத்தம், 18 வகை போட்டிகள் நடத்தப்பட்டன. மாலை, பரிசளிப்பு விழா நடந்தது.
தமிழ் ஒப்புவித்தல், கதை கூறுதல், வண்ணம் தீட்டுதல், ஆங்கிலம் ஒப்புவித்தல், மாறுவேடப்போட்டி, களிமண் பொம்மை செய்தல், பேச்சு போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, மெல்லிசை தனிப் பாடல், தேசபக்தி பாடல், நடனம், கிராமப்புற நடனம், பரதம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.
பங்கேற்ற மாணவ, மாணவியர் ஒவ்வொருவரும் தங்கள் கலைத்திறமையை வெளிக்கொணர்ந்த நிலையில், போட்டி கடுமையாக இருந்தது.
இதில், அம்மாபாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவியர், 12 போட்டிகளில் பரிசு பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, திருமுருகன்பூண்டி ரோட்டரி சங்க நிர்வாகிகள் சுந்தரம், பழனிசாமி, சக்கரபாணி ஆகியோர் கேடயம் வழங்கி ஊக்குவித்தனர்.
கலைத்திருவிழாவில் பங்கேற்ற மாணவ, மாணவியர் முகங்களில் நம்பிக்கைக்கீற்று!

