/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அயோத்தி ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேகம்:தீபம் ஏற்றி கொண்டாட அழைப்பு
/
அயோத்தி ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேகம்:தீபம் ஏற்றி கொண்டாட அழைப்பு
அயோத்தி ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேகம்:தீபம் ஏற்றி கொண்டாட அழைப்பு
அயோத்தி ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேகம்:தீபம் ஏற்றி கொண்டாட அழைப்பு
UPDATED : ஜன 21, 2024 02:04 AM
ADDED : ஜன 21, 2024 12:38 AM

திருப்பூர்;அயோத்தி ஸ்ரீராமர் கோவில் கும்பாபிேஷகத்தன்று (நாளை), திருக்கார்த்திகை தீபவிழாவை போல், வீடுகளில் தீபம் ஏற்றி கொண்டாட வேண்டு மென விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நாடே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தபடி, ஸ்ரீராமர் கோவில் கும்பாபிேஷக விழா, நாளை கோலாகலமாக நடக்கிறது. விழாவில், நாடு முழுவதும் உள்ள மக்கள் பங்கேற்க இயலாது என்பதால், முன்கூட்டியே, வீடு வீடாக அட்சதை மற்றும் ராமர் கோவில் படம் மற்றும் வழிபாட்டு முறை குறித்த கையேடு வழங்கப்படுகிறது.
திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில் நேற்று பக்தர்களுக்கு ஸ்ரீராமர் கோவில் அட்சதை, போட்டோ மற்றும் வழிபாட்டு முறை குறித்த விவரங்கள் வழங்கப்பட்டது. ஸ்ரீராமர் கோவில் கும்பாபிேஷகத்தை, கண்டு களிக்க வேண்டும். கும்பாபிேஷகம் நிறைவுற்றதும், ஸ்ரீராமபிரானை வழிபட்டு, அட்சதையை குடும்பத்தில் உள்ள அனைவரும் தலையில் இட்டு வழிபட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
அதுமட்டுமல்ல, இந்தியாவின் ஐநுாறு ஆண்டு கால எதிர்பார்ப்பு நாளை நிறைவேற உள்ளது. எனவே, ஹிந்துக்கள் ஒவ்வொருவரும், நாளை மாலை, வீடு, தொழிற்சாலை, கடைகளின் முன், கார்த்திகை தீபத்திருவிழா போல், தீபம் ஏற்றி வைத்து கொண்டாட வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டது.
திருப்பூர் திருப்பதி கோவில்
ஸ்ரீராமர் கோவில் கும்பாபிேஷகத்தையொட்டி, நாளை மாலை, 6:00 மணிக்கு, ஊத்துக்குளி ரோட்டிலுள்ள திருப்பூர் திருப்பதி கோவிலில், ராமநாம லிகித ஜபம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பக்தர்கள், தங்கள் பிரார்த்தனை நிறைவேற, கோவில் வளாகத்தில் உள்ள ஆஞ்சநேயர் சன்னதி முன் அமர்ந்து, 'ஸ்ரீராம ஜய ராம ஜய ஜய ராம' எனும் தாரக மந்திரத்தை, 108 முறை எழுதி சமர்ப்பிக்கலாம். குடும்ப சகிதமாக பங்கேற்று, ஸ்ரீராமபிரானின் அருளுக்கு பாத்திரமாகலாம் என, கோவில் நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

