/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆனைமலையாறு- திட்டம் முதல் கையெழுத்தாகுமா? உ.உ.க., எதிர்பார்ப்பு
/
ஆனைமலையாறு- திட்டம் முதல் கையெழுத்தாகுமா? உ.உ.க., எதிர்பார்ப்பு
ஆனைமலையாறு- திட்டம் முதல் கையெழுத்தாகுமா? உ.உ.க., எதிர்பார்ப்பு
ஆனைமலையாறு- திட்டம் முதல் கையெழுத்தாகுமா? உ.உ.க., எதிர்பார்ப்பு
ADDED : ஜூலை 13, 2025 11:50 PM

பல்லடம்; ஆனைமலையாறு- - நல்லாறு திட்டமே அடுத்து அமையும் ஆட்சியின் முதல் கையெழுத்தாக இருக்க வேண்டும் என, உ.உ.க., மாநிலத் தலைவர் செல்லமுத்து வலியுறுத்தி உள்ளார்.
பல்லடத்தில், நேற்று அவர் கூறியதாவது:
திருப்பூர், கோவை மாவட்டங்களில் உள்ள பல லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பி.ஏ.பி., திட்டத்தால் பாசன வசதி பெறுகின்றன. ஆண்டுதோறும் பி.ஏ.பி., பாசன நீரின் அளவு குறைந்து கொண்டே வருவதுடன், இத்திட்டத்தில் விடுபட்ட பல ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள், தண்ணீர் இன்றி தவித்து வருகின்றன. ஆனால், விவசாயத்துக்கு பயன்பட வேண்டிய தண்ணீர், கடலில் கலந்து வீணாகி வருகிறது.
இவற்றைக் கருத்தில் கொண்டே, 60 ஆண்டு காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ள ஆனைமலையாறு -- நல்லாறு திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என, தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இருப்பினும், ஒவ்வொரு தேர்தல்களின் போதும், அரசியல் கட்சியினர் வாக்குறுதி அளிப்பதும், பின்னர், வாக்குறுதியை மறந்து, திட்டத்தை கிடப்பில் போடுவதுமே வழக்கமாகி விட்டது.
அத்திக்கடவு- - அவிநாசி திட்டத்தைப் போன்றே, ஆனைமலையாறு- - நல்லாறு திட்டத்துக்காகவும் போராட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, வழக்கமான தேர்தல் வாக்குறுதியாக இல்லாமல், அடுத்து வரும் ஆட்சியின் முதல் கையெழுத்தாக ஆனைமலையாறு- நல்லாறு திட்டம் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

