ADDED : செப் 20, 2026 05:13 PM

அ நிறம் | அளவு
பல்லடம், செப்.21–
‘அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் உள்ள ஆனைமலையாறு–நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, ஏர்முனை இளைஞர் அணி மாவட்ட துணைத்தலைவர் ஈஸ்வரமூர்த்தி வலியுறுத்தியுள்ளார்.
‘‘அத்திக்கடவு–அவிநாசி திட்டம் போராட்டங்களுக்கு பிறகு நிறைவேற்றப்பட்டதைபோல், ஆனைமலையாறு–நல்லாறு திட்டத்தையும் செயல்படுத்த வேண்டும்.
விவசாயத்தை பாதுகாக்க இத்திட்டம் அவசியம் என்பதால், திட்டத்தை நிறைவேற்றுவதற்கான காலக்கெடு மற்றும் அரசின் நிலைப்பாடு குறித்து தெளிவான அறிக்கை வெளியிட வேண்டும்.
தமிழகத்தின் நீர் உரிமையை உறுதி செய்ய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளையும் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்’’ என்றார் ஈஸ்வரமூர்த்தி.
––
படம் வேண்டாம்.
